என் மலர்

  இந்தியா

  நாராயண் ரானே
  X
  நாராயண் ரானே

  சிவசேனா தலைவர் பதவி மீது சஞ்சய் ராவத் கண் வைக்கிறார்: நாராயண் ரானே குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சஞ்சய் ராவத் சிவசேனாவின் வளர்ச்சிக்கு உதவ முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் சிவசேனா தலைவர் பதவி மீது கண் வைக்கிறார் என்றே தோன்றுகிறது என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
  மும்பை :

  சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பா.ஜனதா தலைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக கிரித் சோமையா உள்ளிட்டவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று கூறினார்.

  இதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நாராயண் ரானே நிருபர்களிடம் கூறியதாவது:-

  சஞ்சய் ராவத் பா.ஜனதா தலைவர்கள் மீது எந்த ஆவண ஆதாரமும் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்கிறார். பிறகு எப்படி அவர் ஆதாரம் இன்றி பேசுகிறார்.

  சஞ்சய் ராவத் சிவசேனாவின் வளர்ச்சிக்கு உதவ முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் சிவசேனா தலைவர் பதவி மீது கண் வைக்கிறார் என்றே தோன்றுகிறது.

  நான் 15 வயதிலிருந்தே சிவசேனாவில் பணியாற்றி உள்ளேன். அதை அடுத்து சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த சஞ்சய் ராவத் இப்போது தன்னை கட்சியின் ஒரு கடின உழைப்பாளியாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். சஞ்சய் ராவத்திக்கு எதிராக கிரித் சோமையா சில சரியான கேள்விகளை முன்வைத்துள்ளார். அவரை நான் ஆதரிக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×