search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு
    X
    சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு

    சுப்ரீம் கோர்ட்டில் முதல் முறையாக 4 பெண் நீதிபதிகள் - கிரண் ரிஜிஜூ பெருமிதம்

    இந்தியா முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டில் 83 பெண் நீதிபதிகள் உள்பட மொத்தம் 1098 நீதிபதிகள் உள்ளனர் என சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட்  மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை மற்றும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

    இந்தக் கேள்விக்கு சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தெளிவாக உருவாக்கப்பட்ட நடைமுறையின் அடிப்படையிலேயே நீதிபதிகள் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 34 நீதிபதிகளில் முதல் முறையாக 4 பெண் நீதிபதிகள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் 3 பேர் தான் சட்டத்துறை மந்திரியாக பொறுப்பேற்றபின் நியமிக்கப்பட்டவர்கள்.

    மேலும், நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டில் 1098 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 83 பேர் பெண் நீதிபதிகளாக உள்ளனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×