search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
    X
    உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

    கரசேவகர்களின் ரத்தத்தால், சமாஜ்வாடி கட்சியின் தொப்பி வர்ணம் பூசப்பட்டுள்ளது - யோகி ஆதித்யநாத் காட்டம்

    குற்றவாளிகள் காவல்துறையினரிடம் சரணடைவதை தமது அரசு உறுதி செய்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்திர பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

    முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அயோத்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட கர சேவகர்களின் ரத்தத்தில் சமாஜ்வாதி கட்சியின் தொப்பி வர்ணம் பூசப்பட்டுள்ளது. சிவப்பு தொப்பிகளை குண்டர்கள் போல் அவர்கள் அணிந்துள்ளனர். 

    குற்றவாளிகள் பயப்படுவதை உறுதிசெய்து அவர்கள் கூப்பிய கைகளுடன் காவல்துறையினரிடம்  சரணடைவதை உறுதி செய்யும் அதே வேளையில், மக்களைப் பாதுகாக்கவும், அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் தனது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. 

    முந்தைய சமாஜ்வாதி அரசு மாநிலத்தின் ஏழை மக்களை புறக்கணித்தது. வாசனை திரவிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சில நண்பர்களுக்காக மட்டுமே அந்த அரசு வேலை செய்தது. அவர்கள் (குற்றச்சாட்டுகளை) மறுக்க முடியும், ஆனால் உண்மை என்ன என்பதை மாற்ற முடியாது. 

    அவர்கள் உத்தர பிரதேசத்தையும் அதன் மக்களையும் தங்களுடையவர்களாக ஒரு போதும் கருதவில்லை. அவர்களது கருத்துக்கள் குடும்பத்தை மையமாகக் கொண்டவை மற்றும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டவை. 

    2017 ஆம் ஆண்டுக்கு முன், மாநிலத்தில் ஒவ்வொரு மூன்றாவது நாளுக்கு ஒருமுறை கலவரங்கள் நிகழ்ந்தது, பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பயப்படுவார்கள். பாஜக ஆட்சியில் இது மாறிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    கடந்த ஆண்டு டிசம்பரில் கோரக்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சிவப்பு தொப்பி அணிந்திருப்பவர்கள் மாநிலத்திற்கு ஆபத்துக்கான அறிகுறி என்று சமாஜ்வாடி கட்சியினர் குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×