search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உள்துறை அமைச்சர் அமித் ஷா
    X
    உள்துறை அமைச்சர் அமித் ஷா

    பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் உத்தர பிரதேசத்தை நம்பர்-1 ஆக்குவோம்: அமித் ஷா பிரச்சாரம்

    உத்தர பிரதேசத்தில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வீடு வீடாக சென்று வாக்காளர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தார்.
    முசாபர்நகர்:

    சட்டசபைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்கு மீண்டும் பயணம் மேற் கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உத்திர பிரதேசத்தின் முசாபர்நகர் மற்றும் சஹாரன்பூரில் நாள் முழுவதும் பொது நிகழ்ச்சிகளிலும், வீடு வீடாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். 

    வாக்குசேகரிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர்,  சமாஜ்வாதிக் கட்சியும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது குறித்து விமர்சித்தார்.சமாஜ்
    வாதிக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ரஷ்ட்ரிய லோக்தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் வாக்கு எண்ணும் வரை மட்டுமே ஒன்றாக இருப்பார்கள். சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால் அசம் கான் அமர்வார்,  ஜெயந்த் பாய் வெளியேறுவார். தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று அவர்களது வேட்பாளர்கள் பட்டியலே வெளிப்படுத்தும். 

    நீங்கள் வாக்களிப்பதில் தவறு செய்தால், லக்னோவில் கலவரக்காரர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அவர்களது ஆட்சி அமைந்தால் மீண்டும் மாஃபியா ராஜ்ஜியம் வரும், சாதிவெறி வரும். பாஜகவுக்கு வாக்களித்தால் உத்தர பிரதேசத்தை நம்பர்-1 ஆக்குவோம். இவ்வாறு அமித் ஷா தமது பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார். 

    Next Story
    ×