search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கருடா வாரதி மேம்பாலத்தை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி ஆய்வு செய்தார்
    X
    கருடா வாரதி மேம்பாலத்தை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி ஆய்வு செய்தார்

    திருப்பதியில் கருடா வாரதி மேம்பாலம் விரைவில் திறப்பு- ஏழுமலையான் கோவிலுக்கு நெரிசல் இன்றி செல்லலாம்

    திருப்பதியில் கருடா வாரதி பாலம் திறக்கப்பட்டால் திருப்பதி பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லலாம்.
    திருப்பதி:

    திருப்பதியில் டவுன் பகுதியில் இருந்து திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அலிபிரி வரை ஏற்படுகிறது.

    இதை தடுக்க தேவஸ்தானம் திருமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கருடா வாரதி மேம்பாலத்தை கட்ட முடிவு செய்தது. திருப்பதி நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இதற்கான பணியை செய்தனர்.

    இதில் ஸ்ரீவாச வளைவு முதல் நந்தி வளைவு வரையிலான மேம்பால பணிகள் முடிந்துள்ளன. இந்த கருட வாரதி சீனிவாச சேது மேம்பாலத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வு செய்தார்.

    பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என திருப்பதி எம்.எல்.ஏ கருணாகர ரெட்டி ஆந்திர முதல்வரிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

    முதல்வர் உத்தரவுப்படி கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஸ்ரீநிவாசம் முதல் நந்தி வளைவு வரையிலான பாலத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் இந்த மேம்பாலத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைக்க உள்ளார். பாலம் திறக்கப்பட்டால் திருப்பதி பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது ஆப்கான் திட்ட மேலாளர் ஸ்ரீசுவாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



    Next Story
    ×