search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜோதிராதித்ய சிந்தியா
    X
    ஜோதிராதித்ய சிந்தியா

    புதிய உரிமையாளர்கள் நிர்வாகத்தில் ஏர் இந்தியா செழித்து வளரும்: ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை

    ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘‘ஒட்டுமொத்த நாட்டின் கண்களும் நம் மீது உள்ளன. நாம் என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை காண காத்திருக்கின்றன’’ என்று அவர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது பற்றி மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:-

    ஏர் இந்தியாவின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் பணி உரிய காலத்துக்குள் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்வு, மத்திய அரசின் திறனையும், எதிர்காலத்தில் பங்கு விலக்கலை திறம்பட நிறைவேற்றுவதன் உறுதிப்பாட்டையும் உணர்த்துகிறது.

    புதிய உரிமையாளர்களுக்கு வாழ்த்துகள். அவர்களது நிர்வாகத்தில் ஏர் இந்தியா செழித்து வளரும் என்றும், இந்தியாவில் செழிப்பான, வலுவான சிவில் விமான போக்குவரத்து தொழிலுக்கு பாதை அமைக்கும் என்றும் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘‘ஒட்டுமொத்த நாட்டின் கண்களும் நம் மீது உள்ளன. நாம் என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை காண காத்திருக்கின்றன’’ என்று அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×