என் மலர்

  இந்தியா

  வெளியுறவு அமைச்சக செயலாளர் ரீனாத் சந்து
  X
  வெளியுறவு அமைச்சக செயலாளர் ரீனாத் சந்து

  மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபட இந்தியா முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் கூட்டு பணிக்குழுவை அமைக்க இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
  புதுடெல்லி:

  இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் ஒத்துழைப்புக்கான உச்சி மாநாடு முதல் முறையாக நேற்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

  இந்த மாநாட்டில் கஜகஸ்தான் அதிபர்  காசம்-ஜோமார்ட் தொகயேவ் , உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், தஜிகிஸ்தான் அதிபர்  எமோமலி ரஹ்மான், துர்க்மெனிஸ்தான் அதிபர்  கர்பங்குலி பெர்டிமுகமதோவ், கிர்கிஸ்தான் அதிபர்  சதிர் ஜபரோவ் ஆகியோர் பங்கேற்றனர். 

  இந்தியா 5 மத்திய ஆசிய நாடுகள் பங்கேற்ற உச்சி மாநாடு

  தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி,  பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியா மற்றும் மத்திய ஆசியா இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

  இந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (மேற்கு) ரீனாத் சந்து  செய்தியாளர்களிடம் பேசியதாவது:

  அடுத்த 30 ஆண்டுகளுக்கான வரைபடத்தை தயார் செய்ய பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உச்சிமாநாடு அளவிலான கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த உச்சி மாநாடு 2024 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

  மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் ஆப்கானிஸ்தான் குறித்து நெருக்கமான ஆலோசனைகளை தொடர ஒப்புக்கொண்டனர். மேலும் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு பணிக்குழுவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.  பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவும் மத்திய ஆசிய நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. 

  இந்தியா மற்றும் ஆர்வமுள்ள மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
  Next Story
  ×