search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா
    X
    மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா

    தென் மாநிலங்களில் கொரோனா நிலவரம் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி இன்று ஆலோசனை

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
    புதுடெல்லி: 

    நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, தென் மாநிலங்களின் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மந்திரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    காணொலி மூலம் பிற்பகல் 2.30மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.  தென் மாநிலங்களில் கொரோனா நிலவரம், பொது சுகாதாரத்துறையின் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, லட்சத்தீவு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

    முன்னதாக  ஒன்பது வட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். அதில் கொரோனா பரிசோதனை முடிவுகள் மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள குறித்த தரவுகளை சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

    கொரோனா பரிசோதனை குறைந்துள்ள மாநிலங்களில் அதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய வழிகாட்டுதல்களின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.  

    Next Story
    ×