search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆதரவாளர்களுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி
    X
    ஆதரவாளர்களுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி

    தடி மற்றும் செருப்பால் அடி - பா.ஜ.க., எம்.எல்.ஏ.பேச்சால் சர்ச்சை

    எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதியின் பேச்சு,பா.ஜ.க.வின் உண்மையான முகம் மற்றும் குணத்தை காட்டுவதாக சமாஜ்வாடி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
    கான்பூர்: 

    உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காணொலி மூலம் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  கான்பூர் பாஜக எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி, கித்வாய் நகர் தொகுதியில் காணொலி மூலம் பிரச்சாரம் செய்தார். 

    அப்போது தமது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

    இந்த நேரத்தில், கொடுங்கோலர்கள், ஒருபுறம் பேசுபவர்கள், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள், அவர்களை தடி மற்றும் செருப்பால் அடி, ஆனால் சுட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் எல்லாவற்றையும் கையாள்வேன்.இவ்வாறு தமது பேச்சின்போது அவர் குறிப்பிட்டார்.  

    அவரது பேச்சை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.  இந்த வீடியோவை ஆதரவாளர் ஒருவர் முகநூலில் நேரலையாக ஒளிபரப்பினார். இது தற்போது வைரலாகி வருகிறது. அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளரை தாக்கி, பாஜக எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி பேசியதாக கூறப்படுகிறது. 

    அவரது பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் உண்மையான முகமும் குணமும் இதுதான். இது குறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம் என்று அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.  

    இந்நிலையில் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த வீடியோவை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதாகவும், விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கான்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் நேஹா ஷர்மா குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×