என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
40 வினாடிகளில் 47 புஷ்-அப்: வைரலாகும் பி.எஸ்.எப்.வீரரின் வீடியோ
Byமாலை மலர்25 Jan 2022 6:07 PM GMT (Updated: 25 Jan 2022 9:28 PM GMT)
இந்திய எல்லையை பாதுகாக்கும் பி.எஸ்.எப். வீரர்கள் எந்த தீவிர வானிலை மாற்றங்களையும் எதிர்கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி:
குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், பயங்கரவாத ஊடுருவல்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லைப் பாதுகாப்பு படையான பி.எஸ்.எப். தனது வீரர் ஒருவர் கடும் பனி பிரதேசத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
வைரலாகி உள்ள இந்த வீடியோவில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் 40 வினாடிகளில் 47 புஷ்-அப் உடற்பயிற்சியை அனாயசமான செய்கிறார். கடும் பனி உள்பட எந்த வானிலை மாற்றத்திலும் நாட்டுக்காக எதையும் சாதிப்போம் என்பதை எடுத்தும் காட்டும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
41 வினாடி நீளமுள்ள இந்த விடியோ கிளிப் ஏற்கனவே 34,900 பார்வைகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 22 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 2,876 லைக்குகளைப் பெற்றுள்ளது. இது இதுவரை 447 முறை ரீட்வீட் செய்யப் பட்டுள்ளது. 40 வினாடிகள் 47 புஷ்-அப் என்ற ட்வீட் தலைப்புடன் இதனை BSF தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
40 seconds. 47 push ups.
— BSF (@BSF_India) January 22, 2022
Bring it ON.#FitIndiaChallenge@FitIndiaOff@IndiaSports
@@PIBHomeAffairspic.twitter.com/dXWDxGh3K6
பார்வையாளர் ஒருவர் எங்கள் குளிர்கால சிப்பாய் ஒரு போதும் தோற்கமாட்டார் என்றும், மற்றொரு நெட்டிசன், எங்கள் பி.எஸ்.எஃப் மற்றும் அனைத்து இந்திய ஆயுதப்படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×