search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிபின் ராவத்
    X
    பிபின் ராவத்

    பிபின் ராவத், கல்யாண் சிங் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது

    மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இதற்கிடையே, 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில், மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், உபி முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×