search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி அலிபிரியில் உள்ள தொழிற்சாலையில் தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மன் ஆய்வு செய்த காட்சி.
    X
    திருப்பதி அலிபிரியில் உள்ள தொழிற்சாலையில் தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மன் ஆய்வு செய்த காட்சி.

    திருப்பதியில் பக்தர்களுக்கு பஞ்சகவ்ய பொருட்கள் விற்பனை- தேவஸ்தான அதிகாரி தகவல்

    நூற்றுக்கணக்கான தேசிய வகை பசுக்களை கொண்ட மிகப்பெரிய கோசாலையை நிர்வாகிக்கும் தேவஸ்தானம் தங்களிடம் உள்ள கோசாலையை சரியான முறையில் பயன்படுத்தி திருப்பதி அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

    திருமலை:

    திருப்பதி அலிபிரியில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    இந்துக்களின் பாரம்பரியம் பசுக்களை பிரார்த்திப்பது மட்டுமல்ல. அவற்றிலிருந்து வருகிற பால், சாணம் மற்றும் கோமியம் போன்றவை கொண்டு மருந்து பொருளாக பயன்படுத்தி மேன்மை அடைவதே.

    பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து பெரும் பால், சாணம், கோமியம், நெய், தயிர் ஆகியவை ஆகும். பஞ்ச கவ்யம் என்பது ‘பஞ்ச’ ஐந்து ‘கவ்யம்‘ என்றால் பசுவிலிருந்து பெரும் பொருட்கள் என்று அர்த்தம்.

    பசு சார்ந்த விவசாயம், கோவிலுக்கு ஒரு கோமாதா, கோவிந்தனுக்கு கோ சார்ந்த நைவேத்தியம், எல்லா கோவில்களிலும் ‘கோ பூஜை’, திருமலையில் நவநீத சேவை, மலையடிவாரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட ‘கோ மந்திரம்‘ எனும் பசுவுக்கான கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வழியில் பஞ்சகவ்யத்தால் ஆன பொருட்கள் தயாரித்து பக்தர்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தேசிய வகை பசுக்களை கொண்ட மிகப்பெரிய கோசாலையை நிர்வாகிக்கும் தேவஸ்தானம் தங்களிடம் உள்ள கோசாலையை சரியான முறையில் பயன்படுத்தி திருப்பதி அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

    தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோசாலையில் இருந்து மூல பொருட்கள் தயாரிக்க பெறப்படுகிறது.

    பின்னர் சீனிவாசா ஆயுர்வேத மருந்தகத்தில் செயல்முறை மற்றும் மருத்துவ சூத்திரங்கள் வழங்கி கோயம்புத்தூரை சேர்ந்த ஆயுர்வேதா அமைப்பின் மூலம் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பொருட்கனையும் விற்பனைக்கு மட்டுமே அல்லாமல், தேவஸ்தானத்தின் கோவில்களில் நடக்கும் ஹோமங்களில் தினசரி தேவைக்கும் உபயோகப்படுத்தப்பட உள்ளது.

    எனவே இந்த பொருட்கள் அனைத்தும் வருகிற 27-ந்தேதி முதல் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×