search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    சிவசேனாவின் இந்துத்வா வெறும் பேச்சில் மட்டுமே உள்ளது: பட்னாவிஸ்

    சிவசேனா, பா.ஜனதாவுடன் இருந்தபோது மாநிலத்தில் முதன்மை இடத்தை பிடித்த கட்சியாக இருந்தது. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லாத நிலையில் தற்போது 4-வது இடத்திற்கு சரிந்துவிட்டது.
    மும்பை :

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் கட்சி தொண்டர்களிடம் பேசும்போது, சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டது. மேலும் இந்துத்வாவை வெறும் அதிகாரத்தை பிடிப்பதற்கு மட்டுமே பா.ஜனதா பயன்படுத்துகிறது. சிவசேனா பா.ஜனதாவை விட்டு தான் விலகியுள்ளது. இந்துத்வாவை விட்டு விலகவில்லை, என்றார்.

    இவரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறியதாவது:-

    ராம ஜென்ம பூமி இயக்கத்தில் சிவசேனாவை சேர்ந்த யார் கலந்து கொண்டார்கள். நாங்கள் தான் அந்த இயக்கத்திற்காக தோட்டாக்கள் மற்றும் லத்தியடிகளை வாங்கினோம். உங்கள் இந்துத்வா வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்தார். ஆனால் கல்யாணில் துர்காதி கோவில் பிரச்சினையை சிவசேனாவால் தீர்க்க முடியவில்லை.

    அதேபோல அவுரங்காபாத்துக்கு, சம்பாஜிநகர் என்றும், உஸ்மனாபாத் தாராஷிவ் என்றும் பெயர் மாற்ற முடியவில்லை. ஆனால் உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத், பிரயாக்ராஜ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    பேச்சுக்கு அப்பாற்பட்ட உங்கள் இந்துத்வம் தான் என்ன? உங்கள் தேவை இந்துத்வா வாழவேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பேச்சுடன் நின்றுவிட கூடாது.

    சிவசேனா, பா.ஜனதாவுடன் இருந்தபோது மாநிலத்தில் முதன்மை இடத்தை பிடித்த கட்சியாக இருந்தது. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லாத நிலையில் தற்போது 4-வது இடத்திற்கு சரிந்துவிட்டது. அப்படியானால் யாருடன் சிவசேனா தனது ஆண்டுகளை வீணடித்தது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 4-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×