search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    நேதாஜியின் பங்களிப்பிற்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கற்களாலான பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    புது டெல்லி:  

    ஆங்கிலேயருக்கு எதிராக ராணுவ வீரர்களை திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  

    இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியதாவது :- 

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையான அஞ்சலிகள். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்.  நான் நேதாஜியிடம் தலை வணங்குகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×