search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அகிலேஷ் யாதவ்
    X
    அகிலேஷ் யாதவ்

    உ.பி. தேர்தல்- அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டி

    சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் தகவல் தொழில்நுட்ப துறையில் 22 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்போம் என்று அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ம்தேதி முதல் மார்ச் 3ம் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நோக்கில் சமாஜ்வாடி கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வந்திருப்பது சமாஜ்வாடி கட்சிக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. 

    தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் வர்மா நேற்று முன்தினம் கூறினார்.

    இந்நிலையில், அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் இன்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என ராம்கோபால் யாதவ் முறைப்படி அறிவித்தார். 

    உ.பி.யில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நானும், என் கட்சியினரும் போட்டியிடுகிறோம் என அகிலேஷ் யாதவ் கூறினார். சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் தகவல் தொழில்நுட்ப துறையில் 22 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

    அகிலேஷ் யாதவ் தற்போது ஆசம்கர் பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×