
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சிலை நிறுவும் பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
நன்றி உணர்வுள்ள நாடு, நேதாஜிக்கு அளிக்கும் மரியாதையாக இதை பார்க்க வேண்டும். நேதாஜி சிலை நிறுவுவதால், நாட்டு மக்கள் மனதில் தேசபக்தி, சுயமரியாதை தட்டி எழுப்பப்படும்.
சுதந்திரத்தை பராமரிக்க எல்லாவற்றையும் தியாகம் செய்யும் உணர்வையும் அளிக்கும். நேதாஜி சிலையை நிறுவுவதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.