search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரப்பிரதேச அமைச்சர் ஸ்வாதி சிங், அவரது கணவர் தயாசங்கர் சிங்
    X
    உத்தரப்பிரதேச அமைச்சர் ஸ்வாதி சிங், அவரது கணவர் தயாசங்கர் சிங்

    ஒரே தொகுதியில் போட்டியிட போட்டி போடும் தம்பதி - சீட்டு பிரச்சினையால் திணறும் பா.ஜ.க.

    யாரை போட்டியிட வைப்பது என்பது குறித்து கணக்கெடுப்புக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என உத்தரப்பிரதேச பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த  15 ஆம் தேதியன்று 107 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மேலும் 85 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

    இந்த நிலையில், சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருக்கும்  ஸ்வாதி சிங்கும் அவரது கணவர் தயாசங்கர் சிங் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.கவில் இருவரும் இணைந்தனர். ஸ்வாதி சிங் அமைச்சராக உள்ளார். தற்போது கணவன் மனைவியிடையே நிலவும் பிரச்சினையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  

    சரோஜினி நகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அமைச்சர் ஸ்வாதி சிங் அந்த தொகுதியில் பிரச்சாரத்திற்கான பேனர்களை தயார் செய்து வைத்துள்ளார். ஆனால் அவரது கணவரோ போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க மறுத்துள்ளார். கடந்த முறை நான் அவளைப் போட்டியிடச் செய்தேன், இந்த முறை நான் போட்டியிடுவேன் என்று தயாசங்கர் சிங் தெரிவித்துள்ளார். 

    ஒரே தொகுதியை இருவர் கேட்கும் சீட்டு பிரச்னையால், பா.ஜ., திணறி வருகிறது. இந்நிலையில், கணக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும் என்ற உத்தரப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×