search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் அலுவலகம்
    X
    காங்கிரஸ் அலுவலகம்

    உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகல்

    ஷியோபால் சிங் அனூப்சாகர் தொகுதியில் போட்டியிட தொடர்ந்து சீட் கேட்டதாகவும், கடசி தலைமை சவுத்ரி கஜேந்திர சிங்கை நிறுத்தியதால் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
    புலந்த்சாகர்:

    உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், அதிருப்தி  தலைவர்கள் மற்றும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் கட்சி தாவுவது அதிகரித்துள்ளது. சமீபத்தில், பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சமாஜ்வாடி கட்சிக்கு தாவினர்.

    இந்நிலையில், புலந்த்சாகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு முக்கிய தலைவர்கள் வெளியேறி உள்ளனர். மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஷியோபால் சிங், மாவட்ட பொதுச்செயலாளர் ராகுல் வால்மீகி ஆகியோர்  கட்சியில் இருந்து விலகினர். வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்ததால் அவர்கள் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. 

    ஷியோபால் சிங் அனூப்சாகர் தொகுதியில் போட்டியிட தொடர்ந்து சீட் கேட்டதாகவும், கடசி தலைமை சவுத்ரி கஜேந்திர சிங்கை நிறுத்தியதால் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

    கஜேந்திர சிங், ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் கடந்த மாதம் இணைந்தார். அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்துள்ளார்.
    Next Story
    ×