search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அஞ்சனாத்ரி மலை
    X
    அஞ்சனாத்ரி மலை

    திருப்பதி அஞ்சனாத்ரி மலைக்கு நடைபாதை: வருகிற 15-ந்தேதிக்குள் சீரமைக்க ஏற்பாடு

    ஆஞ்சநேயர் பிறந்த இடமாக அறிவிக்கப்பட்ட அஞ்சனாத்ரி மலையில் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி கூறினார்.
    திருப்பதி:

    திருப்பதி மலையில் ஆகாச கங்கை அருகே உள்ள அஞ்சனாத்ரி மலை ஆஞ்சநேயர் பிறந்த இடமாக கடந்த ஆண்டு தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஞ்சநேயர் கர்நாடகாவில் உள்ள ஹம்பி மலையில் பிறந்ததாக அங்குள்ள வேத பண்டிதர் தெரிவித்தார்.

    இதுகுறித்து திருப்பதியில் ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் கர்நாடகாவை சேர்ந்த வேத பண்டிதர்கள் இடையே விவாத கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிறைவடைந்தது. இதையடுத்து திருப்பதியில் உள்ள வேதபாடசாலை பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் ஆஞ்சநேயர் பிறந்த இடம் எது என்பது குறித்து புராணங்கள், சாஸ்திரங்கள், கல்வெட்டுக்களை ஆய்வு செய்து தேவஸ்தானத்திற்கு அறிக்கை அளித்தனர்.

    அந்த அறிக்கையில் ஆஞ்சநேயர் பிறந்தது திருப்பதி அஞ்சனாத்ரி மலை தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆஞ்சநேயர் அஞ்சனாத்ரி மலையில் தான் பிறந்தார் என்ற ஆதாரங்களுடன் புத்தகம் அச்சடிக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அஞ்சனாத்ரி மலையை மேம்படுத்துவது குறித்து தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி பேசுகையில், ஆஞ்சநேயர் பிறந்த இடமாக அறிவிக்கப்பட்ட அஞ்சனாத்ரி மலையில் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    புராணங்கள் சாஸ்திரங்களில் உள்ளது போல் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அஞ்சனாத்திரிக்கு நடந்து செல்லும் பாதை அமைப்பது குறித்த செயல் திட்டத்தை வடிவமைத்து தர வேண்டும் என தெரிவித்தார்.
    Next Story
    ×