என் மலர்

  இந்தியா

  பாலியல் தொல்லை
  X
  பாலியல் தொல்லை

  பாலியல் தொல்லைக்கு ஆளான இளம்பெண் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு போலீசார் முறையான விசாரணை நடத்தாதே காரணம் என சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த தென்னிப்பாலம் பகுதியை சேர்ந்த பெண், தனது 18 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

  அந்த பெண், தென்னிப்பாலத்தில் குடிவரும் முன்பு கோழிக்கோடு பகுதியில் வசித்தார். அப்போது அந்த பெண்ணின் மகளுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.

  இது தொடர்பாக அந்த பெண் கோழிக்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பின்பு அவர் அங்கிருந்து தென்னிப்பாலம் வந்தார். அங்கும் அவருக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர்.

  இது தொடர்பாக அந்த இளம்பெண்ணின் தாயார் தென்னிப்பாலம் போலீசிலும் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் தனது மகளை உறவினர் உள்பட 6 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர், இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

  அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் தாயார் நேற்று முன்தினம் வெளியே சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு இளம்பெண் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் மீண்டும் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதற்கிடையே இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு போலீசார் முறையான விசாரணை நடத்தாதே காரணம் என சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இளம்பெண்ணை உறவினர் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்ததும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இளம்பெண் இறந்திருக்க மாட்டார் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
  Next Story
  ×