search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தலையை மட்டும் துண்டித்து பிளாஸ்டிக் கவரில் வைத்து (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)ஆட்டோவில் சென்றபோது எடுத்தபடம்
    X
    தலையை மட்டும் துண்டித்து பிளாஸ்டிக் கவரில் வைத்து (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)ஆட்டோவில் சென்றபோது எடுத்தபடம்

    ரேணிகுண்டா அருகே கணவரை கொன்று தலையை துண்டித்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச்சென்ற மனைவி

    கணவன் தலையை மட்டும் தனியாகத் துண்டித்து ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு ஆட்டோவை அமர்த்தி ரத்தக்கறையோடு ரேணிகுண்டா நகர போலீஸ் நிலையத்துக்குச் சென்று மனைவி சரணடைந்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி :

    இந்தப் பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசாராவ்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரா (வயது 53). வியாபாரியான இவர் திருப்பதியை அடுத்த திருச்சானூர் பகுதியில் சொந்தமாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்தார்.

    இவருடைய மனைவி வசுந்தரா (50). இவர், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கித்தலூர் பகுதியைச் சேர்ந்தவராவார். அவர்களுக்கு 20 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளார். அவர்கள், ரேணிகுண்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

    ரவிச்சந்திராவுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    வழக்கம்போல் நேற்று காலை கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த வசுந்தரா சமையல் அறையில் காய்கறிகள் வெட்டும் கத்தியால் ரவிச்சந்திராவின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார்.

    பின்னர் தலையை மட்டும் தனியாகத் துண்டித்து ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு ஆட்டோவை அமர்த்தி ரத்தக்கறையோடு ரேணிகுண்டா நகர போலீஸ் நிலையத்துக்குச் சென்று வசுந்தரா சரணடைந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சுயாதவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விரைந்து சென்று ரவிச்சந்திராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து வசுந்தராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ரேணிகுண்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×