search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஐ.சி.யூ.பிரிவில் சிகிச்சை
    X
    பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஐ.சி.யூ.பிரிவில் சிகிச்சை

    ஐ.சி.யூ.பிரிவில் பாடகி லதா மங்கேஷ்கருக்கு தொடர் சிகிச்சை

    லதா மங்கேஷ்கர் விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று,செய்தித் தொடர்பாளர் அனுஷா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த  8 ஆம் தேதி லேசான கொரோனா பாதிப்புகளுடன்  மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் லதா மங்கேஷ்வரின் செய்தித் தொடர்பாளர் அனுஷா சீனிவாசன் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது:

    லதா மங்கேஷ்கர் இன்னும் ஐ.சி.யு.வில் கண்காணிப்பில் இருக்கிறார். டாக்டர் பிரதித் சம்தானி மற்றும் அவரது அற்புதமான மருத்துவர்கள் குழு கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் லதா தொடர்ந்து ICU வில் இருக்கிறார். 

    அவரது உடல் நிலை குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது கவலை அளிக்கிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். திறமையான மருத்துவர்களின் சிகிச்சையில் தொடர்ந்து ஐ.சி.யு.வில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×