search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறார்களுக்கு புதிய வழிகாடடு நெறிமுறைகள் வெளியீடு
    X
    சிறார்களுக்கு புதிய வழிகாடடு நெறிமுறைகள் வெளியீடு

    ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமல்ல - மத்திய அரசு தகவல்

    18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு கொரோனா தடுப்பு சிகிச்சையின்போது மோனோக்ளோனல் மருந்துகளை பயன்படுத்த கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. தமிழகம் உள்பட  பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட காட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  

    புதிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா பாதிப்புக்கு பிந்தைய பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு ஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்பட்டால், அவை குணமடைந்ததற்கு பிந்தைய நிலையில் 10ல் இருந்து 14 நாட்களுக்குள் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    ஐந்து வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளுக்கு முக கவசம் அணிய தேவையில்லை. 6 முதல் 11 வயதுக்குள் உள்ள குழந்தைகள் தங்கள் பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும் சரியாகவும் முக கவசம் அணியலாம். 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்கள் பெரியவர்கள் அணிந்திருக்கும் அதே நிபந்தனைகளின் கீழ் முககவசம் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

    அறிகுறியற்ற மற்றும் லேசான கொரோனா பாதிப்புக்கு  நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை அல்லது நோய்த்தடுப்பு சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய்த் தொற்றின் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல், வைரஸ் தடுப்பு அல்லது மோனோக்ளோனல் மருந்துகளை பயன்படுத்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.  

    அதேபோல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பு ஆன்டி பயோடிக் மருந்துகள் சரியான நேரத்தில், சரியான அளவு மற்றும் சரியான காலத்திற்கு கொடுக்கப்பட  வேண்டும். கொரோனா அறிகுறிகள் தோன்றியதிலிருந்து முதல் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஸ்டெராய்டு தடுப்பு மருந்துகள் தவிர்க்க வேண்டும் இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×