search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரமோத் குப்தா
    X
    பிரமோத் குப்தா

    பா.ஜ.கவில் இணைந்த அகிலேஷ் யாதவின் மற்றொரு உறவினர்

    நேற்று முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜ.கவில் இணைந்தார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநில அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.  

    சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 மந்திரிகள், 5 எம்.எல்.ஏக்கள் திடீரென பா.ஜ.கவில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர். இது பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நேற்று உ.பியின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜ.கவில் இணைந்தார். அகிலேஷ் யாதவின் குடும்ப உறுப்பினர் ஒருவரே பா.ஜ.கவில் இணைந்தது புதிய திருப்பமாக அமைந்தது. 

    இந்நிலையில் இன்று முலாயம் சிங் யாதவின் மருமகனும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பிரமோத் குப்தா பாஜகவில் இணைந்துள்ளார்.

    அகிலேஷ் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர் பா.ஜ.கவில் இணைந்துள்ளது சமாஜ்வாடி கட்சிக்கு பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×