search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ்
    X
    மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ்

    உ.பி தேர்தல்: சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்த மம்தா பானர்ஜி

    உத்தர பிரதேச பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 

    அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவுக்கும்- அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

    பா.ஜ.கவில் இருந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 மந்திரிகள் மற்றும் 5 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் துணை தலைவர் கிரண்மோய் நந்தா கூறியதாவது:-

    உத்தர பிரதேச தேர்தலில் திரிணாமுல் காங்கிர கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் வாரணாசியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. 

    அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டு பேசவுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உத்தர பிரதேசத்தில் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிட மாட்டார்.

    இவ்வாறு கிரண்மோய் நந்தா தெரிவித்தார்.
    Next Story
    ×