search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தினசரி பாதிப்பு குறைந்தது- நாடு முழுவதும் புதிதாக 2.58 லட்சம் பேருக்கு கொரோனா

    கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 385 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2.58 லட்சமாக குறைந்துள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,58,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று முன்தினம் பாதிப்பு 2.71 லட்சமாக இருந்த நிலையில், நேற்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

    கொரோனாவுக்கு நேற்று 385 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 451 ஆக உள்ளது.

    நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 740 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 461-ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் தற்போது சிகிச்சை எடுத்துவருவோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 56 ஆயிரத்து 341-ஆக உள்ளது.

    இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 16.66 சதவீதத்தில் இருந்து 19.65 சதவீதமாக குறைந்துள்ளது.

    நாடு முழுவதும் மொத்தம் 157 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×