search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதி

    கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரித்து வருகிறார்.
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். 

    தேர்தல் வாக்குறுதியில் அவர் கூறியதாவது:

    கோவா மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி 13 அம்ச திட்டங்களை உருவாக்கியுள்ளது. இதன்படி கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். 

    வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். சுரங்கத்தொழில் கோவாவிற்கு நிலையான எதிர்காலம் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நில உரிமையை வழங்குவோம்.

    கோவா மாநில மக்களுக்கு முன்பு தேர்தல் என்றால் பா.ஜ.க அல்லது காங்கிரஸ் தவிர வேறு கட்சிகள் கிடையாது. இந்த முறை ஆம் ஆத்மி கட்சி புதிய நம்பிக்கையை வழங்கி இருக்கிறது. மக்கள் அரசாங்கத்தின் மீது விரக்தியில் உள்ளனர். புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
    Next Story
    ×