search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தடம்புரண்ட ரெயில் பெட்டிகள்
    X
    தடம்புரண்ட ரெயில் பெட்டிகள்

    மேற்கு வங்காள ரெயில் விபத்தில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு- நிவாரணம் அறிவித்தது ரெயில்வே

    விபத்து பற்றி தகவல் அறிந்த பிரதமர் மோடி, ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து விசாரித்தார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டன. தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.  45 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்து பற்றி தகவல் அறிந்த பிரதமர் மோடி, ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து விசாரித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக தெரிவித்தார்.
    Next Story
    ×