search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹிமந்தா பிஸ்வா சர்மா
    X
    ஹிமந்தா பிஸ்வா சர்மா

    பிரதமரை கொல்ல பஞ்சாப் முதல்வர் சதி செய்தார் - ஹிமந்தா பிஸ்வா சர்மா பகீர் குற்றச்சாட்டு

    பிரதமருக்கான பாதுகாப்பு குளறுபடி தொடர்பான வழக்கில் பஞ்சாப் முதல்வரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
    கவுகாத்தி:

    பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 5ம் தேதி பஞ்சாப் மாநிலம் சென்றபோது, அவர் சென்ற பாதையில் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, பாதுகாப்பு கருதி பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது. பின்னர் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரிப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் மீது பாஜகவினர் தொடர்ந்து விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துவருகின்றனர். 

    மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட பிரதமரின் வாகனம்

    இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியை கொல்வதற்கு காங்கிரஸ் மேலிடமும், பஞ்சாப் முதல்வரும் சதி செய்திருக்கிறார்கள் என்பதை அனைத்து ஆதாரங்களும் தெளிவுபடுத்துகின்றன என்றம், இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்வரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

    பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அந்த ஸ்டிங் ஆபரேசனில், பிரதமரை கொல்ல முயற்சிப்பது தொடர்பாக ஜனவரி 2 ஆம் தேதி காவல்துறைக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. 

    இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், சதித்திட்டம் பற்றி அவர்களுக்கு தெரியும் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் சர்மா கூறி உள்ளார்.
    Next Story
    ×