என் மலர்

  இந்தியா

  சுவாமி பிரசாத் மவுரியா
  X
  சுவாமி பிரசாத் மவுரியா

  என் நகர்வு பா.ஜ.கவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது- சுவாமி பிரசாத் மவுரியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அகிலேஷ் யாதவுக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை கைப்பற்றுவதற்கு சுவாமி பிரசாத் மவுரியாவை பா.ஜ.க நம்பி இருந்தது.
  லக்னோ:

  உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

  இந்த நிலையில் பா.ஜனதா கட்சிக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.-வும், மந்திரியுமான சுவாமி பிரசாத் மவுரியா மந்திரி, எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து மேலும் 4 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து சுவாமி பிரசாத் மவுரியா கூறுகையில்:-

  எனது நகர்வு பாஜகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் இப்போது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். விரைவில் பா.ஜ.கவில் இருந்தும் வெளியேறுவேன். திரும்பவும் பா.ஜ.கவிற்கு செல்லப்போவதில்லை. வரும் ஜனவரி 14-ம் தேதி என்னுடைய அடுத்த திட்டம் என்பதை அறிவிப்பேன். அகிலேஷ் யாதவ் என்னை போனில் அழைத்து வாழ்த்தினார்.

  இவ்வாறு சுவாமி பிரசாத் மவுரியா கூறினார்.

  சுவாமி பிரசாத் மவுரியா வெளியேறியது பா.ஜ.க தலைமை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் முக்கிய தலைவராக சுவாமி பிரசாத் மவுரியா இருந்து வருகிறார். உத்தரப்பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை கைப்பற்றுவதற்கு மவுரியாவை பா.ஜ.க நம்பி இருந்த நிலையில் தற்போது அவரது நடவடிக்கைகள் பா.ஜ.கவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
  Next Story
  ×