search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒமைக்ரான் பரிசோதனை
    X
    ஒமைக்ரான் பரிசோதனை

    இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 4,461 ஆக உயர்வு

    மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் காணப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் 28 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது. 1,711 பேர் சிகிசைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

    ஒமைக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.  அந்த மாநிலத்தில் 1,247  பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ராஜஸ்தானில்  645 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது.

    டெல்லியில் 546 பேருக்கும், கர்நாடகாவில் 479 பேருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 350, உத்தரப்பிரதேசத்தில் 275 பேருக்கும் ஒமைக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தமிழ்நாட்டில் 185 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.  குஜராத்தில் 236 பேருக்கும், ஹரியானாவில் 123 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதேபோல் லடாக், மணிப்பூர், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும்  28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×