search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய மந்திரி மனுசுக் மாண்டவியா
    X
    மத்திய மந்திரி மனுசுக் மாண்டவியா

    முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் 12 ந்தேதி தொடக்கம்

    உச்சநீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து, நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலின் நடைபெறும் தேதியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதல்  அமல்படுத்தும் அரசாணைக்கு எதிராக பல்வேறு முதுகலை மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

    திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் காரணமாக, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதி அளித்தனர்.

    இதையடுத்து ஜனவரி 12 ந்தேதி முதல் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவ முதுகலை படிப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி  மனுசுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

    இது தொடர்பாக தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவர் பதிவிட்டிருப்பதாவது: நீட்- பிஜி கவுன்சிலிங் ஜனவரி 12ந் தேதி  தொடங்குகிறது. இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கு மேலும் பலத்தை அளிக்கும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, குடியுரிமை மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சகம் உறுதியளித்தது. 

    கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இவ்வாறு மனுசுக் மாண்டவியா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×