search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்கள் பட்டியல் - தமிழகத்திற்கு மூன்றாம் இடம்

    தெற்கு மண்டலத்தின் சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புதூர் பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    2020ம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று அறிவித்தார். இதில் நீர் மேலாண்மையில்  சிறந்து விளங்கும் மாநிலங்களில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் மாநிலம் இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

    நீர் மேலாண்மையில் தெற்கு மண்டலத்தின் சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புதூர் பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

    சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரிவில் மதுரை மாநகராட்சிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. சிறந்த பள்ளிகள் பிரிவில் காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. 

    சிறந்த தொழிற்சாலைகள் பிரிவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2ம் இடமும், சமூக ஆர்வலர் பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா நர்தீப் 2ம் இடமும் பெற்றுள்ளன.
    Next Story
    ×