என் மலர்

  இந்தியா

  சஞ்சய் ராவத்
  X
  சஞ்சய் ராவத்

  சஞ்சய் ராவத் மனைவி, மகளுக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவசேனா கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தின் மனைவி மற்றும் மகள், மருமகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
  மும்பை :

  மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நோய்தொற்று காரணமாக பொதுமக்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அண்மையில் மந்திரி வர்ஷா கெய்க்வாட், பாலாசாகேப் தோரட் மற்றும் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அரவிந்த் சாவந்த் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

  இந்தநிலையில் சிவசேனா கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தின் மனைவி மற்றும் மகள், மருமகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர்களை தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

  இதேபோல பா.ஜனதா மூத்த தலைவரும், சட்டமன்ற மேல்-சபை உறுப்பினருமான பிரவின் தாரேக்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான தகவலை அவர் டுவிட்டரில் உறுதி படுத்தி உள்ளார்.

  மேலும் அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளும்படி தெரிவித்து இருந்தார்.

  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதில்லை என மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் ஏற்கனவே அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×