search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவசேனா
    X
    சிவசேனா

    மோடி தன்னை துறவி என கூற முடியாது: சிவசேனா கருத்து

    பிரதமரின் பாதுகாப்பும், சவுகரியமும் முக்கியம். ஆனால் இனிமேல் தலைமை வேலைக்காரன் தன்னை துறவி என கூறிக்கொள்ள முடியாது.
    மும்பை :

    பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டுக்கு சமீபத்தில் மெர்சிடஸ்- மேபேக் ரக சொகுசு கார் வாங்கப்பட்டது. இந்த காரின் மதிப்பு ரூ.12 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகின. இந்தநிலையில் அதிக விலைக்கு பிரதமருக்கு சொகுசு கார் வாங்கிய விவகாரம் குறித்து சிவசேனா கருத்து கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடிக்கு ரூ.12 கோடிக்கு சொகுசு கார் வாங்கப்பட்டு இருப்பதாக கடந்த 28-ந் தேதி ஊடகங்களில் செய்தி வெளியாகியது. தன்னை துறவி, தலைமை வேலைக்காரன் என கூறிக்கொள்ளும் ஒருவர் வெளிநாட்டு காரை பயன்படுத்துகிறார். பிரதமரின் பாதுகாப்பும், சவுகரியமும் முக்கியம். ஆனால் இனிமேல் தலைமை வேலைக்காரன் தன்னை துறவி என கூறிக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த விவகாரம் குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், "மேக்இன் இந்தியா, ஸ்டாட்-அப் இந்தியா போன்ற உள்நாட்டு உற்பத்தி திட்டங்களை தொடங்கிய மோடி தற்போது வெளிநாட்டு காரை பயன்படுத்துகிறார். நாட்டின் முதல் பிரதமர் நேரு இந்தியாவில் தயாரான அம்பாசிடர் காரை தான் பயன்படுத்தினார்.

    இதேபோல தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதும் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களை மாற்றவில்லை" என்றார்.
    Next Story
    ×