search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மது விற்பனை
    X
    மது விற்பனை

    புத்தாண்டில் ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ.296 கோடிக்கு மது விற்பனை

    புத்தாண்டையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ.296 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    திருப்பதி:

    ஆந்திரா தெலுங்கானாவில் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாடினர்.

    புத்தாண்டையொட்டி தெலுங்கானாவில் ரூ.172 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. 1.76 லட்சம் குவாட்டர் பாட்டில் பாக்ஸ்களும், 1.66 லட்சம் பீர் பாட்டில் பாக்ஸ்களும் விற்பனையாகியுள்ளது.

    அதிகபட்சமாக ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 42.26 கோடிக்கும், வாரங்கல் மாவட்டத்தில் 24.78 கோடிக்கும், ஹைதராபாத்தில் 23.13 கோடிக்கு மது விற்பனையானது.

    ஆந்திராவில் ரூ.124.10 கோடிக்கு மதுவிற்பனையானது. ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு ஆந்திராவில் மதுபானங்களின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டது.

    இதனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மதுபானங்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆந்திராவில் மதுபான விற்பனை பாதியாக குறைந்தது.

    இதையடுத்து மதுபான விற்பனையை உயர்த்தும் நோக்கில் கடந்த வாரம் ஆந்திராவில் மதுபான விலையை அதிரடியாக குறைத்து ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாதாரண நாட்களில் ரூ.60 முதல் 65 கோடி வரை மதுபானம் விற்பனை ஆகி வந்தது. மதுபான விலை குறைக்கப்பட்டதால் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளதாக ஆந்திர மாநில கலால்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×