search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
    X
    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி

    ஒற்றுமைக்கு எதிரான பேச்சை அனுமதிக்க கூடாது - ஆயுதப்படை முன்னாள் தலைவர்கள் கோரிக்கை

    வெறுப்பு பேச்சு நாட்டின் ஒற்றுமைக்கும் இறையான்மைக்கும் எதிரானது. இதை அனுமதிக்க கூடாது என்று ஆயுதப்படை முன்னாள் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுடெல்லி:
     
    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு,  முன்னாள் கடற்படைத் தலைவர்களான அட்மிரல் (ஓய்வு) எல் ராம்தாஸ், அட்மிரல் (ஓய்வு) விஷ்ணு பகவத், அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ் மற்றும் அட்மிரல் (ஓய்வு) ஆர்.கே.தோவன் உள்பட ஆயுதப் படைகளின் முன்னாள் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

    கோப்பு படம்


    அண்மையில் ஹரித்வாரில் நடந்த ஒரு மாநாட்டில் வன்முறையைத் தூண்டும் வகையில் வகுப்புவாதக் கருத்துக்கள் பேசப்பட்டதற்கு  கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. வெறுப்பின் வெளிப்பாடுகளுடன் சேர்ந்து வன்முறையைத் தூண்டுவதை  அனுமதிக்க முடியாது. 

    இது உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலை உருவாக்குவது மட்டுமல்லாமல், நமது தேசத்தின் சமூகக் கட்டமைப்பை சீரழிக்க கூடும். நமது எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டிற்குள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, நாட்டிற்கு எதிரான அன்னிய சக்திகளை ஊக்குவிக்கும். எனவே இது போன்ற பேச்சுகளை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×