search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலை விபத்து
    X
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலை விபத்து

    சாலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

    நெல் அறுவடை செய்து விட்டு தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
    மேதினிநகர்:

    ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ஹரிஹர்கஞ்ச் என்ற இடத்தில் நேற்று வேனும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில்
    மூன்று பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.

    பாலமு மாவட்டத்தை சேர்ந்த அந்த விவசாய தொழிலாளர்கள், அண்டை மாநிலமான பீகாரில் உள்ள சிஹுடி கிராமத்தில் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பணி முடிந்து தங்கள் கிராமத்திற்குத் அவர்கள்  திரும்பிக் கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையில்  விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விபத்து குறித்து அறிந்த ஹரிகர்கஞ்ச் பி.டி.ஓ. ஜெய்பிரகாஷ் நாராயண் விசாரணை மேற்கொண்டார் . விபத்து நடந்த இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் இறந்ததாகவும் மேலும் மூன்று பெண்கள், சிகிச்சையின் போது இறந்ததாகவும் அவர் கூறினார்.

    காயமடைந்தவர்களில் 12 தொழிலாளர்கள்   ஹரிஹர்கஞ்ச் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி சுதாமா குமார் தாஸ் தெரிவித்தார். பலத்த காயம் அடைந்த மேலும் ஆறு தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    ===
    Next Story
    ×