என் மலர்

  இந்தியா

  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
  X
  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

  தற்காலிக நிவாரணம்... ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்திவைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பை மாற்றியமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  புதுடெல்லி:

  ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வரி விதிப்பு ஜவுளித் துறையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும், ஜனவரி 1க்கு மேல் துணிகள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது ஜவுளித் துறையினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஜிஎஸ்டி அதிகரிப்புக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்தினர்.

  ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை ஜனவரி 1 ஆம் தேதி உயர்த்துவதை ஒத்திவைக்கும்படி மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

  இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றங்கள், மாநில அரசுகளின் கோரிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்படவில்லை என்றும், வரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

  ‘எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பை மாற்றியமைப்பது என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது. காலணிகள் மீதான வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை’ என்றும் நிதி மந்திரி கூறினார்.

  எனவே, ஜனவரி 1ஆம் தேதி முதல் காலணிகளுக்கான ஜிஎஸ்டி வரியானது 12 சதவீதமாக உயர்த்தி வசூலிக்கப்படும். காட்டன் நீங்கலாக, ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களுக்கு 12 சதவீத சீரான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×