
2020-21-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை கடந்த 25-ந்தேதி வரை 4 கோடியே 43 லட்சத்து 17 ஆயிரத்து 697 பேர் தாக்கல் செய்துள்ளனர். அதில் கடந்த 25-ந்தேதி மட்டும் 11 லட்சத்து 68 ஆயிரத்து 27 பேர் தாக்கல் செய்துள்ளனர்.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு இமெயில், எஸ்.எம்.எஸ். மூலமாக வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டி வருகிறது. வழக்கமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். ஆனால் வருகிற 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.