search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர்
    X
    மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர்

    வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என சொல்லவில்லை - மத்திய மந்திரி மறுப்பு

    விவசாயிகளுக்கான நலத் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றுதான் தாம் தெரிவித்ததாக மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் விளக்கம் அளித்துள்ளார்.
    நாக்பூர்:

    தலைநகர் புதுடெல்லியில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள்  திரும்ப பெறப்பட்டன.  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்பட ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் மீண்டும் வேளாண் சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

    இந்நிலையில்  மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் வேளாண் சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என சூசகமாக தெரித்திருந்தார்.

    “வேளாண் திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமான இந்தச் சட்டங்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதற்காக அரசுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. இப்போது ஒரு படி பின்வாங்கியிருக்கிறோம். விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால், மீண்டும் முன்னேறுவோம்.” என்றார்.

    அவரது இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று தமது கருத்தை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என சொல்லவில்லை. அரசு சிறப்பான வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது என்று நான் சொன்னேன். சில காரணங்களுக்காக நாங்கள் அதை திரும்ப பெற்றோம். விவசாயிகளுக்கான நலத் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றுதான் தாம் தெரித்திருந்தேன். இவ்வாறு
    மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தமது நேற்றைய பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    Next Story
    ×