search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    நீதி, பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு அறிவிப்பு

    தேசிய நல்லாட்சி தினம் கடைப்பிடிக்கப்படுவதை தொடர்ந்து நல்லாட்சி குறியீடு பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நல்லாட்சி குறியீடு - 2021 குழு ‘ஏ’ மாநிலங்கள், குழு ‘பி’ மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 4 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

    இந்நிலையில், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை நல்லாட்சி தினத்தன்று டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று வெளியிட்டார்.

    இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ‘ஏ' குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

    நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது
    அவர் பேசியதாவது:

    கடந்த 7 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர். மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014-ம் ஆண்டு முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    நல்லாட்சிக்கு உதாரணமாக, கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லை. ஏனெனில் இது தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் என தெரிவித்தார்.

    Next Story
    ×