search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பறிமுதல் செய்யப்பட்ட பணம்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பணம்

    வருமான வரி சோதனையில் சிக்கிய பண குவியல்: தொழில் அதிபர் வீட்டில் ரூ.177 கோடி பறிமுதல்

    கான்பூரில் உள்ள தொழிலதிபர் பியூஷ் ஜெயினின் பங்களாவில் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    கான்பூர்:

    உத்தரபிரதேசத்தில் கான்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய நிறுவனம் நடத்தி வருகிறார். மற்றும் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடு படுவதாக வந்த புகாரையடுத்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களில் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனை உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்  நடந்தது. இதில் கான்பூரில் உள்ள பியூஷ் ஜெயினின் பங்களாவில் பணம் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பீரோக்களில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை பார்த்து அதிகாரிகள் மலைத்துப் போனார்கள்.

    பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி அங்கேயே எண்ணினார்கள். அதிகளவில் பணம் இருந்ததால் எண்ண முடியாமல் திணறினர். இதையடுத்து பணம் எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வங்கி ஊழியர்களின் உதவியும் நாடப்பட்டது.  நேற்று காலை நிலவரப்படி தொழில் அதிபர் வீட்டில் இருந்த பணத்தை எண்ணியதில் ரூ.150 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை எண்ணினர். நேற்று நள்ளிரவில் பணம் எண்ணி முடிக்கப்பட்டது. இதன் முடிவில் தொழில் அதிபர் வீட்டில் பதுங்கிய ரூ.177.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வரி ஏய்ப்பு தொடர்பாக இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கான்பூர் மற்றும் கன்னாஜ் பகுதியில் இன்றும் சோதனை நடைபெறுகிறது.
    Next Story
    ×