என் மலர்

  இந்தியா

  ஒமைக்ரான் வைரஸ்
  X
  ஒமைக்ரான் வைரஸ்

  கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு 37 ஆக அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளிநாடுகளில் இருந்து வருவோர் அரசு அறிவித்த கட்டாய தனிமையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் இப்போது ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த வாலிபருக்கு முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அவரை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மாமியாருக்கும் தொற்று உறுதியானது.

  அடுத்து கென்யா, அல்பேனியா நாடுகளில் இருந்து கேரளா வந்தவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியானது.

  இதன்மூலம் கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு 37 ஆக அதிகரித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் பகுதிகளை சேர்ந்தவர்கள். எனவே இங்கு வெளிநாடுகளில் இருந்து வந்தோரை தீவிரமாக கண்காணிக்க மாநில சுகாதார துறை ஏற்பாடு செய்துள்ளது.

  மேலும் விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் அரசு அறிவித்த கட்டாய தனிமையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதன்மூலம் மட்டுமே தொற்று பிறருக்கு பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.


  Next Story
  ×