search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
    X
    திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

    வாரணாசியில் ரூ.870 கோடியில் புதிய திட்டங்கள்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    பிரதமர் இன்று அடிக்கல் நாட்டிய புதிய திட்டங்கள் மற்றும் பணிகள் நிறைவடைந்து துவக்கி வைத்த திட்டங்களின் மதிப்பு மொத்தம் ரூ.2095 கோடி ஆகும்.
    வாரணாசி:

    உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற  உள்ள நிலையில், பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும், மத்திய, மாநில  அரசுகளும் இணைந்து செயல்படுத்திய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

    அந்த வகையில் தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 870 கோடி ரூபாய் மதிப்பிலான 22 திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 475 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கர் நிலத்தில் உருவாக இருக்கும் ‘பனாஸ் டெய்ரி சங்குல்’திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் தினசரி ஐந்து லட்சம் லிட்டர் பால் பதப்படுத்த முடியும். இதுதவிர மேலும் சில திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் பங்கேற்ற மக்கள்

    பிரதமர் இன்று அடிக்கல் நாட்டிய புதிய திட்டங்கள் மற்றும் பணிகள் நிறைவடைந்து துவக்கி வைத்த திட்டங்களின் மதிப்பு மொத்தம் ரூ.2095 கோடி ஆகும்.

    விழாவில் பேசிய பிரதமர்  மோடி, பசுக்கள் மற்றும் எருமைகள் தொடர்பாக கேலி பேசுபவர்கள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து உள்ளது என்பதை மறந்து விடுகின்றனர், என்றார். பசு நமக்கு தாய் மற்றும் புனிதமானது, சிலர் அதை பாவம் என்று கருதுகின்றனர் என்றும் மோடி குறிப்பிட்டார்.
    Next Story
    ×