search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரியானாவில் மது அருந்துவதற்கான வயது 21 ஆக குறைப்பு

    இந்தியாவின் பிற மாநிலங்களில் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கு குறைந்தபட்ச வயது வரம்புகளை நிர்ணயம் செய்து இருப்பதால் அரியானாவிலும் வயது வரம்பை குறைத்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் மது அருந்தும் வயது குறைந்தபட்சம் 25 ஆக இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் மது விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடு அங்கு இருந்தது.

    இந்த நிலையில் அரியானாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 25-ல் இருந்து 21 ஆக குறைத்து சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அரியானா சட்டசபையில் கலால் திருத்த மசோதா 2021 தாக்கல் செய்யப்பட்டது. அதில் மது அருந்துதல், அதை வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் இப்போது கல்வி அறிவு பெற்றவர்களாகவும், குடிபழக்கம் குறித்த பகுத்தறிவு கொண்டவர்களாகவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பிற மாநிலங்களில் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கு குறைந்தபட்ச வயது வரம்புகளை நிர்ணயம் செய்து இருப்பதால் அரியானாவிலும் வயது வரம்பை குறைத்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் தலைநகர் டெல்லியில் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கான வயது வரம்பு 21 ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×