search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
    X
    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் நிறைவேற்றம் -மத்திய அரசு தகவல்

    பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து விவாதம் நடத்த முடியவில்லை என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வருத்தம் தெரிவித்துள்ளார்
    புதுடெல்லி

    கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,  மொத்தம் 24 நாட்கள் 18 அமர்வுகளாக இந்த கூட்டத் தொடர் நடத்தப்பட்டது என்றார். மேலும் அவர் கூறியதாவது:

    மாநிலங்களவையில் 9 சட்ட மசோதாக்களும், மக்களவையில் 11 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.  சட்ட மசோதாக்கள் மீது மொத்தம் 21 மணி நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி அனைத்துக் கூட்டம் நடத்தப்பட்டது. விலைவாசி உயர்வு பிரச்சினைக்கே முதல் முக்கியம் அளிக்கப்பட்டது. நிதி அமைச்சர் விவாதம் நடத்த தயாராக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விவாதம் நடைபெறவில்லை.  தேர்தல் சட்டத்தில் சிறிய அளவே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஒ பிரெய்ன் எப்படி நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.

    நாடாளுமன்றம்

    பாராளுமன்ற மக்களவையில் கொரோனா குறித்த விவாதம் 12 மணி நேரம் 26 நிமிடம் நடைபெற்றது. இதில் 99 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கொரோனா காலத்தில் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற சிறந்த பணிகளுக்கு சபையில் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற மாநிலங்களவை நிகழ்ச்சிகள் மொத்தம் 49 மணி நேரம் 32 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதுடன் ஒத்தி வைக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு வருத்தம் தெரிவித்தார். எனினும் இந்த அமர்வின் போக்கு குறித்து விரிவாக பேச தாம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×