search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோரின் சொத்துகளை விற்று ரூ.13,100 கோடி மீட்பு -நிதி மந்திரி தகவல்

    கடனைத் திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறியவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து பொதுத்துறை வங்கிகளில் சேர்த்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    புதுடெல்லி: 

    பாராளுமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    பெண்களின் வங்கி கணக்குகள் அதிகரித்து வருகின்றன. பெண்களின் கல்வி முன்னேற்றம் அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் மானிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா காலத்தில் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

    வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரின் சொத்துக்கள் விற்கப்பட்டு, அதன்மூலம் ரூ,13,000 கோடியை வங்கிகள் மீட்டுள்ளன. கடந்த ஜூலை 16ம் தேதி மல்லையா மற்றும் பிறருக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தன்மூலம் ரூ.792 கோடி மீட்கப்பட்டது சமீபத்திய மீட்பு ஆகும்.

    பொதுத்துறை வங்கிகள் இணைந்து கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் ரூ.5.49 லட்சம் கோடியை வசூலித்துள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியவர்களிடம் பணத்தை வசூலித்து பொதுத்துறை வங்கிகளில் சேர்த்துள்ளோம். அதனால் வங்கிகள் இன்று பாதுகாப்பாக உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. 

    சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசுகளைப் பொருத்தவரை கணிசமான அளவு பண இருப்பு உள்ளது. இரண்டு  மாநிலங்களிடம் மட்டுமே பண இருப்பு எதிர்மறையாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×