search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    பா.ஜ.க. அரசுக்கு பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த தெரியவில்லை - ராகுல் காந்தி கருத்து

    பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளின் குரல்களை அரசால் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்திற்கு வெளியே ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற அவைகள் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஏன் அனுமதிப்பதில்லை? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராகுல்காந்தி பேசியதாவது:-

    மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, லக்கிம்பூர் விவசாயிகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து விவாதிக்க அரசு அனுமதித்தால் பாராளுமன்றம் சுமூகமாக இயங்கும்.  பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது மத்திய அரசின் பொறுப்பு. நீங்கள் விதிகளை படித்துப் பாருங்கள். அது அரசின் பொறுப்பு, எங்களுக்கானதல்ல. விவாதம் நடத்த அனுமதிப்பது மத்திய அரசின் பொறுப்பாகும்.

    ஜம்மு காஷ்மீரின் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து விவாதிக்க கோரி நான் நோட்டீஸ் கொடுத்தேன். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே நான் லடாக் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் உங்கள் பிரச்சினையை எழுப்புவோம்’. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த அரசு பிரச்சினையை விவாதிக்க அனுமதிக்கவில்லை. இவ்வாறு தமது பேட்டியின்போது ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

    முன்னதாக தமது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:-

    அவர்கள் ஜனநாயகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.  எனவே நாங்கள் இங்கு போராடுகிறோம். இந்த அரசுக்கு தைரியம் இருந்தால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். இது எந்த மாதிரியான அரசு? பாராளுமன்றத்தை நடத்த தெரியவில்லை. விலைவாசி உயர்வு, லக்கிம்பூர் விவகாரம், குறைந்தபட்ச ஆதார விலை, லடாக் விவகாரம், எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உள்ளிட்டவை குறித்த எங்களின் குரல்களை அவர்கள் தடுத்து நிறுத்த முடியாது.  இவ்வாறு தமது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

    Next Story
    ×