search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
    X
    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

    தர்ணாவில் ஈடுபட்ட சுவேந்துவை போலீசார் கையாண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது- ஜே.பி.நட்டா

    கொல்கத்தா மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை போலீசார் வலுகட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
    கொல்கத்தாவில் மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 144 வார்டுகளிலும் 4,959 வாக்குச் சாவடிகளில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி கடுமையான பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே, கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின் போது, வாக்குச் சாவடிக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதில் வாக்காளர் ஒருவர் காயமடைந்தார். வடக்கு கொல்கத்தாவின் வார்டு 36ல் உள்ள டாக்கி ஆண்கள் பள்ளிக்கு வெளியே இன்று இந்த சம்பவம் நடந்தது.

    இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க.வை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

    அப்போது, பாஜக எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    சுவேந்து அதிகாரி

    இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், " மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்றிருந்த போது, மம்தா பானர்ஜி காவல்துறையைப் பயன்படுத்தி பாஜக மூத்த தலைவரான சுவேந்து அதிகாரியை கையாண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது.

    கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பரவலான தேர்தல் முறைகேடுகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் இப்போது நிர்வாகத்தின் இந்த தவறான முறை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல" என்று அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. உ.பி.யில் எஸ்மா சட்டம்: 6 மாதம் போராட்டம் நடத்த தடை?
    Next Story
    ×